ரஷ்யாவில் தொடரும் உச்சக்கட்ட பதற்றம்! திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு

Russo-Ukrainian War Ukraine Russia
By Chandramathi Jun 24, 2023 08:00 PM GMT
Report

ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் படைகளின் இயக்கத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தை தணிக்கும் வகையில், படை அணிவகுப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் வாக்னர் குழுவின் தாக்குதலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி சார்பாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் தொடரும் உச்சக்கட்ட பதற்றம்! திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு | Russia Wagner Force Russia Ukraine War Updates

ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவானது.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இரண்டாம் இணைப்பு

ரஷ்யாவில் இராணுவத்துடன் மோத துணிந்துள்ள வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதால் உள்நாட்டு போர் வெடிக்குமோ என்று அந்நாட்டு மக்கள் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் ஜனாதிபதி புடினுக்கான சிறப்பு விமானமான Il-96-300PU விமானம் மாஸ்கோவில் இருந்து, அங்குள்ள நேரப்படி பிற்பகல் 2.16 மணியளவில் புறப்பட்டு வடமேற்குத் திசையில் சென்றுவிட்டதாக விமானங்களின் பாதையை பின்தொடரும் FlightRadar சேவை தரவுகளை சுட்டிக்காட்டி சிலர் செய்திகளை பதிவிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் தொடரும் உச்சக்கட்ட பதற்றம்! திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு | Russia Wagner Force Russia Ukraine War Updates

மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள த்வெர் நகருக்கு அருகே, புடின் பயணித்த சிறப்பு விமானம் அந்த கண்காணிப்பு கட்டமைப்பில் இருந்து மறைந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அந்த சிறப்பு விமானத்தில் புடின் இருந்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதலாம் இணைப்பு

ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் படையை கண்டதும் சுட ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

உக்ரைனின் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா பயன்படுத்திய வாக்னர் கூலிப்படை, தற்பொழுது ரஷ்ய அசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வாக்னர் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சி தேச துரோக நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தொடரும் உச்சக்கட்ட பதற்றம்! திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு | Russia Wagner Force Russia Ukraine War Updates

உள்நாட்டு போர்

இதற்கிடையில், இன்று ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர்கள் Voronezh பகுதியில் உள்ள வாக்னர் குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த வாக்னர் அமைப்பு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என்று ரஷ்ய இராணுவத்திற்கு வாக்னர் படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் தொடரும் உச்சக்கட்ட பதற்றம்! திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு | Russia Wagner Force Russia Ukraine War Updates

வாக்னர் பிஎம்சி குழுவிற்கும் ரஷ்ய இராணுவம் மற்றும் தேசிய காவலர் படைகளுக்கும் இடையே வோரோனேஜ் பகுதியில் கடும் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

3 ஹெலிகாப்டர்கள், ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக வாக்னர் படை தகவல் தெரிவித்துள்ளது.   


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


Gallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US