புடினின் மறைமுக கருத்து: வாக்னர் தலைவரின் கொலை தொடர்பில் விளக்கம்
வாக்னர் வாடகைப்படைத் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக வித்தியாசமான விளக்கம் ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி புடின் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, வாக்னர் வாடகைப்படைத் தலைவரான பிரிகோஜின் உட்பட 10 பேர் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு பிரிகோஜின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
புடினுடைய உத்தரவு
இதற்னமைய பிரிகோஜின் புடினுடைய உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாகவும், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நேற்றிரவு ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்,
பிரிகோஜின் மற்றும் அந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் கையெறிகுண்டுகளின் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன், செயின்ட் பீற்றர்ஸ்பர்கிலுள்ள பிரிகோஜினினுடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், 10 பில்லியன் ரூபிள்கள் பணமும், 5 கிலோ கொக்கைன் போதைப்பொருளும் கிடைத்துள்ளது.
புடினின் மறைமுக கருத்து
இப்படியானதொரு சுழலில், விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த சோதனை நடத்தப்படவில்லை'' என தெரிவித்துள்ளார்.
இதன்படி விமானத்தில் பயணித்த பிரிகோஜினும், மற்றவர்களும் போதையில், கையெறிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், அதுவே விமானம் வெடித்துச் சிதறக்காரணமாக காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் புடின் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், விமானம் வெளியிலிருந்து தாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததையும் புடின் மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்: சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு (Video)
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
