கடும் மோதலில் ஈடுப்பட்ட வாக்னர் படை மற்றும் ரஷ்ய இராணுவம்! அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் வெளியான தகவல்
வாக்னர் கூலிப்படை குழு தனது அனைத்து இராணுவ உபகரணங்களையும் ரஷ்ய ஆயுதப் படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று(12.07.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வாக்னர் கூலிப்படை 2,000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் உட்பட T-90, T-80 மற்றும் T-72B3 போன்ற முக்கிய போர் டாங்கிகளையும் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்னர் போராளிகளுடன் போர் பயிற்சி
தோல்வியுற்ற கலகத்திற்கு பிறகு, வாக்னர் போராளிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், பெலாரஸில் நாடுகடத்தப்பட்ட பிரிகோஜினுடன் சேரவும் அல்லது வீடு திரும்பவும் விருப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,பெலாரஸ் உள்துறை அமைச்சகம், நாட்டின் சிறப்பு படைகள் வாக்னர் போராளிகளுடன் போர் பயிற்சியை மேற்கொள்ளும் என்று மாநில ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
எத்தனை வாக்னர் பணியாளர்கள் பெலாரஸுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
