போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு!
உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது.
எனினும் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் உக்ரைன் இராணுவத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆர்வமுள்ள நபர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கும் ஆயுதம் வழங்கப்பட்டு, ரஷ்ய படைகளை எதிர்ப்பதற்கு தயார்படுத்தியுள்ளதுடன்,உக்ரைன் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றார்.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாத ஊதியமாக 1இலட்சம் உக்ரைனிய ஹிருன்யா (இந்திய மதிப்பில் ரூ.2.52 லட்சம்) வழங்கப்படும் எனவும் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
ரஷ்ய - உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான காணொளி
உக்ரைன் பெண்களின் திடீர் முடிவால் பெரும் நெருக்கடியில் ரஷ்ய இராணுவம்
ஐரோப்பிய நாடுகள் மீது அணுவாயுத தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை