கோவிட் காரணமாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம்
கோவிட் தொற்று மற்றும் முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மீள முடியாத கடன் சுமையில் தவிப்பதாகவும் மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் அமைப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில், மாவட்ட பெண் செயற்பாட்டாளர் மேரி பிரியங்கா ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் மன்னாரில் இடம்பெற்ற கூட்டத்திலே வளர்பிறை பெண்கள் அமைப்பின் தலைவி கே.றீற்றா மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் காரணமாகப் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மீனவ பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
அதேநேரம் தங்களின் சுயதொழில் உற்பத்தி பொருட்களையோ மீன்களையோ சந்தைபபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அப்பிடியே சந்தைப்படுத்தினாலும் உரிய விலை கிடைப்பதில்லை.
இது ஒருபுறம் இருக்க நுண் நிதி நிறுவனங்களின் கடன்களில் சிக்கியும் அவற்றைக் கட்ட முடியாத நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் செய்வதறியாத நிலையில் உள்ளன.
அதே நேரம் அரசாங்கத்தின் வீட்டுத்திட்ட நிதியும் பலவருடங்கள் கடந்தும் வழங்கப்படாமையினால் அதன் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையையும் சமாளிக்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய வேண்டிய நிலையே காணப்படுவதாகவும் மன்னார் மாவட்ட வளர் பிறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கம் விரைவில் மக்களுக்கான நிவாரண உதவிகளையோ அல்லது வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதி பணத்தையோ அல்லது மாற்றுத்தொழில் வாய்ப்புக்களையோ ஏற்படுத்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.






நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




