குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் வரிசைகளினால் குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதனால் அங்கு அதிகளவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதனால் குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இரவு நேர பணிகள்
இரவு நேர ரோந்துப் பணிகள் மற்றும் ரோந்துப் பணிகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதிலும் ஆளணி வளம் அதிகளவில் வரிசைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம்: ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஞானசார தேரர் |