வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (Live)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22.11.2022) நடைபெறுகின்றது.
வரவு செலவுத் திட்டம் குறித்த இரண்டாம் வாசிப்பு விவாதங்கள் கடந்த 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 2023 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன் ரூபா ஆகும்.
மொத்த செலவினம் 5,819 பில்லியன் ரூபா ஆகும்.
இதன்படி, ஏற்படக்கூடிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு
மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க
அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் முதல் வரவு செலவுத் திட்டம் குறித்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும், எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இந்த நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
