கிராம அலுவலர்கள் வீடுகளுக்கு வரமாட்டார்கள் - நாட்டு மக்களுக்கு அறிவிப்பு
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளுக்காக கிராம அலுவலர்கள் வீடுகளுக்கு வர மாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள்.
பட்டியல் திருத்தம்
அதன்படி, 2025 வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 2026ஆம் ஆண்டில் சேர்க்கப்பட தகுதியுடைய பெயர்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படும்.

மேலும், www.elections.gov.lk என்ற வலைத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam