அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்
எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06.09.2024) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பொதுஜன பெரமுன
''பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 191 மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் 196 உள்ளுராட்சி சபை உறுப்பினர்களே உள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் 8 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர்.அவர்களினல் 90 வீதமான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர்.
சவால்களை ஏற்காது ஓடியவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால் எம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியுமா?
ஐக்கிய மக்கள் சக்தி பல துண்டுகளாக உடைந்துள்ளன. கண்டியில் ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். கொழும்பில் வோறொன்றை வெளியிடுகிறார்கள்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
