சம்பிக ரணவக அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக, அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவசர காலச் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான நாடாளுமன்றத்தின் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரத்த ஆறு ஓட வழிசெய்ய என்னால் முடியாது
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இந்த நாட்டின் வளங்களை, சொத்துக்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து தங்களை வளர்த்துக் கொண்டது அதற்கு எதிராக என் இளைய தலைமுறை போராடி வருகின்றது.
அவ்வாறான நிலையில் அவசர காலச் சட்டத்தை ஆதரித்து அவர்களை அடக்கியொடுக்கவும், இந்நாட்டில் இரத்த ஆறு மீண்டும் ஓடவும் வழிசெய்ய என்னால் முடியாது
எனவே நான் அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க உள்ளேன் என்றும் சம்பிக ரணவக அறிவித்துள்ளார்.