லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
லண்டனில் K.P.L (Kent Premier League) என்னும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த சுற்றுப்போட்டி நேற்று (27/08/2023) தென்கிழக்கு லண்டன், Abbeywood பகுதியில் உள்ள Bostall Hill வெளியக மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விளையாட்டு போட்டியை கென்ற் (Kent) சவுத்ஈஸ்ட் லண்டன் (South East London) பிராந்தியத்தில் வசிக்கும் வீரர்கள் மற்றும் இப்பிராந்தியத்தில் இயங்கும் கழகங்கள் ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர்.
கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் நிகழ்வாக மங்கல விளக்கை சார்ள்ஸ் (Maidstone), சிவா (Bexley united), சயந்தன்(அல்பேர்ட்), பாபு (Kent Boys) , கிரி (Dartford), தயாபரன் (Jaffna11), பன்னீர்(Trinco Star), பரமன் மாஸ்ரர் (பாஸ்கரன் கழகம்), வரன் (Dartford), சிவாஜி (Bexley United), ஆகியோர் ஏற்றி வைத்துள்ளனர்.
இப்போட்டி நிகழ்வில் 1) Dartford A, 2) Dartford B, 3) பாஸ்கரன், 4) Maidstone, 5) அல்பேர்ட், 6) Kent Boys, 7) Jaffna11, 8) Bexley united A, 9) Bexley united B, 10) ரிங்கோ ஸ்ரார் (Trinco Star) என 10 விளையாட்டு கழகங்கள் பங்குப்பற்றியுள்ளன.
மேலும், போட்டிகள் நிகழ்வுகள் 5a Side , 4A Side என இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்ததுடன், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும்,போட்டியை காண பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிய கழகங்கள் பின்வருமாறு:-
5A-side
1ம் இடம் அல்பேர்ட் கழகம், 2ம் இடம் பாஸ்கரன் கழகம், 3ம் இடம் ரிங்கோ ஸ்ரார் கழகம், போட்டி நாயகன் லஷ்மன் - அல்பேர்ட் கழகம், போட்டி தொடர் நாயகன் சயந்தன் - பாஸ்கரன் கழகம்,
4A-side
1ம் இடம் பாஸ்கரன் கழகம், 2ம் இடம் ரிங்கோ ஸ்ரார் கழகம், 3ம் இடம் கென்ற் போய்ஸ் கழகம், போட்டி நாயகன் பரமன் - பாஸ்கரன் கழகம், போட்டி தொடர்நாயகன் அஜய் - ரிங்கோ ஸ்ரார் கழகம்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிக்கு ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் தம்மீது சுமந்து இப்போட்டி சிறப்பாக நிறைவுற நிதி பங்களிப்பு செய்த பிரதான அனுசரனையாளர்களான..
1) ஜனா (Jace cash and carry), 2)சாள்ஸ் (Maidstone club), 3)சிவா (Bexley United Club), 4)சிவா அண்ணா (Dartford club), 5) பாபு (Kent Boys Club), 6) திரு.கண்ணா (Dartford club)
இப்போட்டி சிறப்புற நிறைவேறுவதற்கு அனைத்து வழிகளிலும் குறிப்பாக நடுவர்கள், புள்ளியிடுனர்கள், கோட்டுக்காப்பாளர்கள், மைதான ஒழுங்கமைப்பு, பொருளுதவி, சரீர உதவி ஒத்திசைந்து உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களிற்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கென்ற் பிரிமியர் லீக்[K.P. குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.