பல தசாப்தங்களின் பின் முதன்முறையாக வடகொரியாவில் கால்பதித்த புடின்: வழங்கப்பட்ட இராஜ மரியாதை
ரஷ்ய (Russia) ஜனாதிபதியான விளாடிமிர் புடின் (Vladmir Putin) கடந்த 24 வருடங்களில் முதன்முறையாக வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அவர் இன்று (19.06.2024) அதிகாலை வடகொரியாவின் (North Korea) பியாங்யாங் நகரத்தில் உள்ள விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
இதன்போது, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு புடின் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னினால் (Kim Jong Un) மரியாதை செய்து வரவேற்கப்பட்டுள்ளார்.
இராணுவ மரியாதை
அதேவேளை, பல மோட்டார் வாகனங்கள் மற்றும் பலத்த பாதுகாப்பு வண்டிகளுடன் புடின் வடகொரியாவிற்குள் சென்றுள்ளார்.
@tamilwinnews 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியா சென்ற ரஷ்ய அதிபர் #Russia #putin #LAnkasrinews #Tamilwinnews #Northkorea #News ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
அது மாத்திரமன்றி, வடகொரிய இராணுவக் காவலர்கள் வெள்ளை குதிரைகளின் மீது அமர்ந்தவாறு வணக்கம் செலுத்தியதுடன் பல்வேறுபட்ட பலூன்களை ஏந்தியும் பறக்க விட்டும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
புடின், கடந்த 24 வருடங்களில் முதன்முறையாக வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இராஜ மரியாதைகளுடன் அவர் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |