வியாழேந்திரன் வீட்டின் முன் இடம்பெற்று துப்பாக்கி சூட்டு சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டில் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (03) உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்யப்பட்டிருந்தார்.
சாரதி கைது
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் நேற்று முன்தினம் (2) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை குறத்தடுப்பு பிரிவினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து முன்னிலைபடுத்தியதை அடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளதுடன் 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam