மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக காரைதீவில் மர நடுகை
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இந்திய முன்னாள் ஜனாதிபதி வைத்தியர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாகவும் காரைதீவு பிரதேசசபை வளாகத்தில் மரக்கன்று நாட்டப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே இந்த மரநடுகை இடம்பெற்றுள்ளது.
மாதாந்த சபை அமர்வுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை
தவிசாளர் கி.ஜெயசிறில், உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை
செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan