இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுப்படுத்தப்படும்! - அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உச்ச அளவில் மட்டுப்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய உல்லாச பயணிகள் தொடர்பில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான சட்டங்கள் காரணமாகவே நாட்டிற்கு வருகை தரும் இந்திய உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கோவிட் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவல் அடைந்து வருகின்றது. கடந்த சில தினங்களில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை விட அதிகரித்துள்ளது.
அதனைக் கருத்திற் கொண்டு சில நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவைகளையும் இடை நிறுத்தியுள்ளன.
அதேவேளை எமது நாட்டிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகள் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தரும் நாடுகளான பிரிட்டன், ஜெர்மன், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைவடைந்து ள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam