அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான அதிகாரி இலங்கை விஜயம்
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
மேலும் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் நேற்று தெரிவித்ததையடுத்து இந்த விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா அமர்வு
பொதுவாக, மனித உரிமைகளில் அதிக கவனம் செலுத்தும் அதிகாரியாக சமந்தா பவர் பார்க்கப்படுகிறார்.
இதன்படி, ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் பவரின் இலங்கைப் பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
