கிண்ணியா படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட தென்கை ஆதீன குருமார்கள் (Photos)
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு உலகத் தமிழர் தேசியப் பேரவை அமைப்பின் உறுப்பினர்களும், மற்றும் தென்கை ஆதீன குருமார்களும் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பிரசித்த பெற்ற தென்கை ஆதின குருக்கள் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் (26) கிண்ணியா பிரதேசத்திற்குச் சென்று குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு,பாதிப்புக்குள்ளான குறிஞ்சாக்கேணி பகுதியையும் பார்வையிட்டுள்ளனர்.
இதன் போது கிண்ணியா பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி (A.S.M.Azmi) மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri