மகிழூர் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டக்ளஸ் உறுதி
மட்டக்களப்பு - மகிழூர் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். குறித்த விஜயத்தினை இன்றையதினம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நக்டா, மற்றம், நாரா நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடன் முன்வைத்துள்ளனர்.
புனரமைப்பு நடவடிக்கை
சுருக்கு வலைகளைத் தடைசெய்தல், கோட்டைக்கல்லாறு கடற்கரையில் பழுதடைந்துள்ள கடற்றொழிலாளர் தங்குமிடம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய புனரமைப்பு செய்தல், நன்னீர் மீன் வளர்ப்பு பண்ணையில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மீன் பிடியாளர்களுக்கும் இடையே காணப்படும் பிரச்சினைகள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது பழுதடைந்துள்ள எதிர்பொருள் நிரப்பு நிலையத்தையும், அதற்குரிய கட்டடமும் புனரமைப்பு செய்து தரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதனை நிருவகிப்பதற்குரிய நபர்கள் முன்வரவேண்டும், எனவும் நன்நீர் மீன் வளர்ப்பாளர்களுக்கும் மீன்பிடியாளர்களுக்குமான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் குழு ஒன்று மிக விரைவில் இப்பகுதிக்கு விஜயம் செய்து அதற்குத் தீர்வு காண்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
மீண்டும் விரைவில் இப்பகுதிக்கு விஜயம் செய்து கடற்றொழிலாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வேன் என இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |