குறிஞ்சாக்கேணி பகுதிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா விஜயம் (Photos)
பெரும் துயரினை எதிர்கொண்ட கிண்ணியா -குறிஞ்சாக்கேணி பகுதிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா (Ali Zahir Maulana) இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளது துயரத்தில் நேரடியாக பங்கேற்றதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தினையும் பார்வையிட்டதுடன் , தற்போது கடற்படையினரால் படகுச்சேவை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்கள் குறித்தும் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் படகுப்பாதை கவிழ்ந்தது முதல் தம்முடன் தொடர்பாடலை பேணியவராக காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரதி கட்டளை அதிகாரி கொமாண்டர் பூஜித விதானுடன் எதிர்கால மக்கள் நலன் பேணும் முன்னெடுப்புக்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan