வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய முகவர் : பெருந்தொகை கடவுச்சீட்டுக்கள் மீட்பு
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பெருமளவு இலங்கையர்களை ஏமாற்றிய முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகலில் செயற்பட்டு வந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரே நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனம் பதிவு செய்யப்படாத நிலையில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள்
மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன், குவைத் உட்பட பல நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக பணமும் கடவுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (31) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam