இலங்கை விசா தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! கிடைத்தது அனுமதி
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் விசா முறைமையை இலகுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய எமது நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வருகை தரு விசா, வதிவிட விசா மற்றும் பயண விசா என 3 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
வீசா வகைகளில் காணப்படும் சிக்கல்
வருகை தரு விசா மற்றும் வதிவிட விசா ஆகிய 2 வகையான விசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற விசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கின்ற விசா முறைகளை கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சமகாலத்தில் நிலவுகின்ற விசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 50 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
