சர்வதேச விசா மோசடியில் ஈடுபட்ட நபர் பெருந்தொகை பணம், நகைகளுடன் கைது
நீர்கொழும்பின் தலுவகொட்டுவ பகுதியில் வீட்டொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது, சர்வதேச அளவிலான விசா மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி விசா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 60 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனையை பொலிஸ் சிறப்புப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டனர்.
போலி விசா
சோதனையின் போது 26.5 மில்லியன் ரூபாய் பணம், 1.5 கிலோகிராம் தங்க நகைகள் மற்றும் போலி விசா தயாரிப்பு உபகரணங்கள் என்பவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், பல்வேறு நாடுகளுக்கான 5 போலி விசா முத்திரைகள், 12 விசா கருவிகள், 11 போலி விசாக்களுடன் கூடிய கடவுச்சீட்டு பக்கங்கள், 312 விசா ஸ்டிக்கர்கள், மற்றும் மோசடி ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டன.



