தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் நாட்டிலேயே வாழ்கின்றோம்: சஜித் ஆதங்கம்
வங்குரோத்து அடைந்துள்ள நம் நாட்டிலும் ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது எனவும், விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மேலும், விசா நடைமுறையை மாற்றியமைத்ததில் கொள்முதல் முறை, விலைமனு முறை, போட்டி முறை உருவாக்கப்பட்டதா என்பதில் பிரச்சினை எழுகிறது என்றும் கூறியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 178 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கொழும்பு, கெஸ்பேவ, ஆனந்த சமரகோன் வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உறையாற்றும்போதே இதனை கூறியுள்ளார்.
விலைமனு கோரல்
“வங்குரோத்தான நாட்டில் கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் போர்வையில் விலைமனு கோரல் முறையிலிருந்து விலகி, தேசிய சொத்துக்களும், வளங்களும் சூறையாடப்படும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
ஊழலைத் தடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும். ஊழலைத் தடுப்பது கட்டளைச் சட்டங்கள் மூலம் மட்டும் மேற்கொள்ளப்படாமல், மேலதிக சுதந்திரத்தை வழங்கி, எளிதில் மாற்ற முடியாத அத்தியாயமாக மாற்ற வேண்டும்.” என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
