இஸ்ரேலில் விசா இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இலங்கை தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கை
விசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டதுடன் குறித்த நிகழ்வு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இன்றும் (25) நடைபெறவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து விசா இல்லாத இலங்கையர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைத்த கோரிக்கை
விசா காலாவதியான பின்னரும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் விசாக்களை புதுப்பிக்குமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கையை இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ ஏற்றுக் கொண்டுள்ளதோடு, செல்லுபடியாகும் விசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை கோரியுள்ளோம்.
விசா நீடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இலங்கையர்களுக்கு விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.