இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவல் தீவிரம்
இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்ப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் இன்ப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் நோய்களின் பரவலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் கே.வி.சி. ஜனக குறிப்பிட்டுள்ளார்.
இதே நேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தொற்று நோய் நிபுணர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார்.
டெங்கு அபாய நிலைமை
ஆண்டின் கடந்த 09 நாட்களில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2170 ஆகும்.

41 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாய நிலைமை நிலவுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.