உபாதைக்கு உள்ளாகியுள்ள விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் வீரர் விராட் கோலி பயிற்சியின்போது உபாதைக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று கொண்டிருக்கும் செம்பியன்ஸ் கிண்ண தொடரில் சிறப்பான சராசரியை விராட் கோலி கொண்டுள்ள நிலையில், குறித்த உபாதையானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி நாளை டுபாயில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
விராட் கோலி
இந்நிலையில் இன்று டுபாயில் இடம்பெற்ற பயிற்சியின் போது விராட் கோலியின் முழங்கால் பகுதியில் பந்து பட்டு உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பயற்சியை உடனடியாக இடைநிறுத்தி அங்கிருந்து அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
எனினும் விராட் கோலிக்கு லேசான வலியே ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பயிற்சியை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே நாளை இறுதிப்போட்டியில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என கண்காணிப்பாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri