மும்பை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பும்ரா!
ஐபிஎல் தொடரில் முதல் 2 வாரங்கள் இடம்பெறவுள்ள போட்டிகளில் ஜஸ்பிரிட் பும்ரா பங்கேற்கமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இவ்வாறு சில போட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம்
முன்னதாக காயம் காரணமாக சாம்பியன்ஷிப் தொடரிலிருந்தும் ஜஸ்பிரிட் பும்ரா வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆரம்ப போட்டிகளில் ஜஸ்பிரிட் பும்ரா பங்கேற்கமாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
கிரிக்கெட் தொடர்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மேலும், 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது எதிர்வரும் மே 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதன்படி தொடரின் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.