தமது முடிவில் உறுதியாக இருக்கும் விராட் கோலி: மொஹமட் சமி தொடர்பிலும் சந்தேகம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, விராட் கோலியை வலியுறுத்தியுள்ள போதிலும், அவர் தமது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு, விராட் கோலி அளித்த உறுதியான அறிக்கை, இதனை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, விராட் கோலியை டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட சம்மதிக்க வைக்க முயற்சித்தும், அந்த முயற்சிகள் விரும்பிய பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் அனுபவமற்ற நடுத்தர வரிசை துடுப்பாட்டத்தில் அவரது இருப்பு முக்கியமானது என்று கருதப்படுகிறது ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையிலேயே விராட்டின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு இன்னும் சிறிது காலமே இருக்கும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமியின் பந்துவீச்சு தகுதி தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.