விராட் கோஹ்லியின் 9 மாத மகளுக்கு பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்: விசாரணை அறிக்கை கோரப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவா் விராட் கோஹ்லி மற்றும் பொலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் 9 மாத மகளுக்கு இணையம் மூலம் பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் விடுத்தமை தொடா்பில் புதுடெல்லி மகளிர் ஆணையம் புதுடெல்லி பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.
ஒன்பது மாத குழந்தை ட்விட்டரில் அச்சுறுத்தப்பட்ட விதம் "மிகவும் வெட்கக்கேடானது" என்று புதுடெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் ட்வீட் செய்துள்ளார்.
இந்த வழக்கில் விசாரணை தொடர்பான தகவல்களைப் பகிருமாறு காவல்துறையை அவா் வலியுறுத்தியுள்ளாா்.
"இந்திய அணி எங்களை ஆயிரக்கணக்கான முறை பெருமைப்படுத்தியுள்ளது,
தோல்வியில் ஏன் இந்த முட்டாள்தனம் என்று மலிவால் கேட்டுள்ளாா்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய டெல்லி காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும்" என்று இந்த அறிவித்தலில் கோரப்பட்டுள்ளது.
துபாயில் நடந்த 20க்கு 20 உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, விராட் கோலியின் மகளுக்கு எதிரான வெறுப்பூட்டும் கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
தோல்விக்குப் பிறகு தனது மதத்தின் மீது குறிவைக்கப்பட்ட தனது சக வீரரான முகமது ஷமிக்காக பேசியபோதும் கோஹ்லிக்கு எதிராக விமா்சனங்கள் வெளியிடப்பட்டன.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri