தவிப்பில் இலங்கை மக்கள் - உலங்கு வானூர்தியில் வட்டமிடும் அரசியல்வாதிகள்
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் உலங்கு வானூர்தி மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக தென்னிலங்கை மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில், எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, உலங்கு வானூர்தி ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து சுற்றி திரிவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,
குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, அப்பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று மிக தாழ்வாக பறந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அந்தப் பகுதியில் கூடியிருந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பொது மக்களுக்கு 1000 ரூபாய்க்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றது. எனினும் பிரபுக்களுக்கு லட்சக்கணக்கில் எரிபொருள் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் தாம் அதிகாலை 5 மணி முதல் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் நிற்பதாகவும் மாலை வரையில் பசியுடன் நின்று எரிபொருள் பெற்றுச் செல்வதாகவும் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.
உண்மையில், இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் உலங்கு வானூர்தி மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக அவர்கள் கடுமையாக பேசியுள்ளனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam