பிரான்ஸில் பதற்றம் உச்சம்! ஊரடங்குக்கு பிரதமர் அதிரடி உத்தரவு..
பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகச் சில நகரங்களில் "பகுதி" மற்றும் "உள்ளூர்" அளவிலான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பிராந்திய அதிகாரிகளுக்குப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sébastien Lecornu ) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் உளவுத்துறை மற்றும் திட்டமிடலில் குறைபாடுகள் இருந்ததை ஜனாதிபதி எமானுவல் மேக்ரோன் ஒப்புக்கொண்ட போதிலும், உள்துறை அமைச்சர் லோரான் நுனேஸின் ( Laurent Nuñez ) பதவி விலகல் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த வார இறுதியில் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் வன்முறையாகவும் சூறையாடலாகவும் மாறியதையடுத்து, பாரிஸ், மார்சேய், லியோன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிலமையைக் கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகளை நடைமுறைப்படுத்தப் பிரதமர் லெகோர்னு பிராந்திய ஆளுநர்களுக்கு ( (Prefects ) அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் போராட்டங்களின் போது சுமார் 2,000 வியாபாரத்தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டுச் சூறையாடப்பட்டன.
நாடு முழுவதும் நடைபெற்ற மோதல்களில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.