யாழ்.சுன்னாகத்தில் வன்முறைக்குழு அட்டகாசம்: இலட்சக்கணக்கான சொத்துகள் நாசம்
யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று அட்டகாசம் புரிந்துள்ளதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றிரவு(3) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த குறித்த வன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
விசாரணை
மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan