யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்! - பொலிஸில் முறைப்பாடு (Photos)
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்குப் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் போட்டுச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்திவருபவரின் வீட்டிலே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri