இந்து கோவில்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்
பங்களாதேஷிலுள்ள இந்து கோவில்கள் மீது நேற்று (14) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன், 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் கொமில்லா இந்து கோவிலில் நேற்று துர்கா பூஜை நடைபெற்ற வேளையில் அடையாளம் தெரியாத குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேபோல், கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri