அயர்லாந்து தலைநகரில் தாக்குதல் : மூன்று சிறுவர்கள் படுகாயம்
அயர்லாந்தின் டப்ளின் ஆரம்ப பாடசாலை அருகே மர்ம நபர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
இதில் சிறுமி ஒருவரும் பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், வழிபோக்கர் ஒருவரால் அந்த தாக்குதல்தாரி சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
ஆபத்தன நிலையில் இருவர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று சிறார்களும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
காயமடைந்துள்ள ஐவரும் டப்ளின் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பெண் ஒருவரும் சிறுமி ஒருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |