பிரான்ஸில் தொடரும் வன்முறை - அமைதி காக்க இமானுவேல் மக்ரோன் கோரிக்கை
பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் சீர்குலைந்து வரும் பொதுச் சேவைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்து கலவரமாகவும் சூறையாடலாகவும் மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் பேணுமாறு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் காயம்
அரண்மனையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மேக்ரன், "மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், வன்முறையில் ஈடுபட்டுச் சூறையாடுபவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.
இந்த வன்முறையை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுமார் 5,50,000 மக்கள் அமைதியான முறையில் தங்களது உரிமைகளுக்காகத் தெருக்களில் இறங்கிப் போராடினர்.
எனினும் பின்னர் பாரிஸ், மார்சே மற்றும் லியோன் ஆகிய நகரங்களில் முகமூடி அணிந்த குழுக்கள் புகுந்து வாகனங்கள், கட்டிடங்களுக்குத் தீ வைத்ததுடன் கடைகளையும் சூறையாடினர்.
லிமோஜஸ் (Limoges) நகரில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் (Town Hall) கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 2,400 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோதலில் சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.