வடக்கு அயர்லாந்து Belfast பகுதியில் தொடரும் வன்முறை! - பல வாகனங்களுக்கு தீவைத்து எரிப்பு
பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்து Belfast பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக குறைந்தது 55 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாகவும், 13 மற்றும் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கலகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முழுவதுமாக வெளியேறிய நிலையில், அந்நாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தெற்கு அயர்லாந்துடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு, பிரித்தானியா புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு அயர்லாந்துவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தும், வெடிப் பொருட்களை வெடித்தும், எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
புதன்கிழமை இரவு Belfast பகுதியில் இடம்பெற்ற கலவரம் வடக்கு அயர்லாந்தில் பல ஆண்டுகளாக காணப்படாத அளவில் இருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல மணி நேர வன்முறையின் போது, பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன, அத்துடன், பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை காரணமாக குறைந்தது 55 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாகவும், 13 மற்றும் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கலகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரக்காட்சிகள் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. வேற்றுமைகளை பேசினால் தான் தீர்வு கிடைக்கும் அதற்காக கலவரம் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் தீர்வு தராது” என்று பதிவிட்டுள்ளார்.
I am deeply concerned by the scenes of violence in Northern Ireland, especially attacks on PSNI who are protecting the public and businesses, attacks on a bus driver and the assault of a journalist. The way to resolve differences is through dialogue, not violence or criminality.
— Boris Johnson (@BorisJohnson) April 7, 2021