சிகரெட் ஒன்றால் ஏற்பட்ட வன்முறை - வர்த்தகர் மீது கத்திக் குத்து தாக்குல்
தலவாக்கலையில் வர்த்தகர் ஒருவர் சிகரெட் ஒன்று வழங்காமையினால் கோபமடைந்த நபர், குறித்த வர்த்தகரை கூர்மையான ஆயுதம் ஒன்றினால் குத்தியுள்ளார்.
மேலும் வர்த்தகரின் 60 ஆயிரம் பெறுமதியான கையடக்க தொலைபேசிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த நபர் கடை ஒன்றிற்கு சென்று கடனிற்கு சிகரெட் ஒன்று வழங்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் கடனுக்கு வழங்க முடியாதென கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றில் வர்த்தகரை குத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த வர்த்தகர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நேற்று இரவு தலவாக்கலை நகரில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



