கொழும்பு தேசிய நூலகத்தில் வன்முறை: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள பொது நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசபக்தி தேசிய முன்னணி அமைப்பினரின் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு தேசபக்தி தேசிய முன்னணி அமைப்பினால் நேற்றையதினம் (12.09.2024) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடாத்தியதாக தேசபக்தி தேசிய முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தாக்குதல் நடாத்திய குழுவினர் வந்து அதற்கெதிராக கருத்துகளை வெளியிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டோர் தடியடி தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |