சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த மோதல் - பிரான்ஸில் 400-க்கு மேற்பட்டோர் கைது
சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹங்கேரியில் இடம்பெற்ற சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், 1:1 என சமநிலையில் முடிய, பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4:3 அடித்து வெற்றிப் பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக பிஎஸ்ஜி அணி கிண்ணம் வென்றுள்ளது. இதன்போது, இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையில், 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தில் நெருப்பு பற்றவைக்கப்பட்ட வாகனங்களால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பொலிஸாரின் குவிக்கப்பட்டுள்ளனர்.
400-க்கும் மேற்பட்டவர்கள் கைது
இதில் 7 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், போட்டிக்கு முன்னதாகவே, பொலிஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 6 வாகனங்கள், 2 பேருந்துகள், 2 தற்காலிக வணிக கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொத்தமாக 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில், பாரீஸில் மட்டுமே 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சீசனில் நடந்த கொண்டாட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!