ஸ்பெயினில் இதுவரை 38 பெண்கள் ! படுகொலை.வன்முறையை பிரம்மாண்ட பேரணி..
ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றையதினம்(25) விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ஆம் திகதி அனுசரிக்கப்பட்டது.
பிரம்மாண்ட பேரணி
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

ஸ்பெயினில் நடப்பாண்டில் இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து டிரம்ஸ் இசைக்கருவியை வாசித்து பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
ஸ்பெயின் மந்திரி ஆனா ரெடோண்டோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.