பங்களாதேஸில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்வதாக அறிவிப்பு
பங்களாதேஸில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மதம் ஒன்று குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சுமத்தி, சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியையொட்டி துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்து கோவில்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் பதற்றமும், வன்முறையும் பல இடங்களில் பரவியது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில், வன்முறையாளர்கள் 100 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். 4 வன்முறையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், நேற்று 20-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளதாகவும்,66 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டாக்காவிலிருந்து 225 கி.மீ. தூரத்தில் உள்ள ரங்கபுர் என்ற
கிராமத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri