தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 முறைப்பாடுகள் பதிவு
புதிய இணைப்பு
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளது.
மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முதலாம் இணபை்பு
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது அரசியல் நோக்கங்களுக்காக சில அரச நிறுவனங்களின் சிரேஷ்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியமை, பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பெஃப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
மேலும் அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.