சாய்ந்தமருது நகரசபை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு
சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி.டி. சில்வா, பிரியந்த பெர்ன்ண்டோ, சம்பத் அபேக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு எடுக்கப்பட்டது.
வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்கும் போது, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை ஒத்திவைப்பது அந்த பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் எனவே, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சிமன்றங்கள் உருவாக்கம்
மேலும், சாய்ந்தமருது நகரசபைக்கு தனியாக தேர்தல் நடத்த விரும்பினால் 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த உள்ளூராட்சிமன்ற எல்லைகளைக் கருத்தில் கொண்டு மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் கல்முனை பட்டின சபையை மையமாகக் கொண்டு கல்முனை மாநகர சபை, கரைவாகுப்பற்று வடக்கு கிராம சபையை மையமாகக் கொண்டு மருதமுனை பிரதேச சபை மற்றும் கரைவாகுப்பற்று மேற்கு கிராம சபையை மையமாகக் கொண்டு மேலும் ஒரு பிரதேச சபையை கல்முனையில் உருவாக்கப்படல் வேண்டும் என சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் வாதிட்டார்.
இந்நிலையில், வழக்கின் முழு விசாரணைகளும் வெள்ளிக்கிழமை பூர்த்தியடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
