நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாவதை தவிர்க்கும் விந்தன் கனகரத்தினம்
தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்காக தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பில் விந்தன் கனகரத்தினம் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக தன் மீது பரப்பியதாக தெரிவித்து விந்தன் கனகரத்தினத்தின் மீது குருசாமி சுரேந்திரனால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று(14) நான்காவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுத்தும் நான்கு வழக்கிற்கும் விந்தன் கனகரத்தினம் வருகை தரவில்லை தெரியவருகிறது.
மேலதிகமான சட்டச் சிக்கல்கள்
இது குறித்து ரெலோவின் முக்கியஸ்தரும், வழக்கு தொடுனருமான குருசாமி சுரேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
“நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் அவர் நீதிமன்றிற்கு வரவில்லை போல தெரிகிறது.
மேலும் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தபடி அவதூறுகளை பரப்பிய பொழுது, ஊடகவியலாளர்கள் "நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன" என்று கேட்ட பொழுது நான் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று விந்தன் கரகரத்தினம் வீராப்பு பேசியது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச் சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பியதனாலேயே இப்பொழுது நீதிமன்றத்தை முகம் கொடுக்க முடியாமல் ஒளித்து திரிவது தெரியவந்துள்ளது.
இது இவ்வாறு தொடருமாக இருந்தால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிற்கும் சேர்த்து மேலதிகமான சட்டச் சிக்கல்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குள் அவர் தள்ளப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
