பருத்தித்துறை நகரசபை தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு
பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளார்.
வின்சன் தீபோல் டக்ளஸ் போல் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர் முன்மொழியப்பட்டிருந்தனர்.

ஜீவநந்தினி பாபு தலைமையில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்தது. மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
பகிரங்க வாக்கெடுப்பு
இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan