விமலை கடுமையாக சாடிய காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி தலைவராக இருந்த தானிஷ் அலி இதனை தெரிவித்துள்ளார்.
சீனத் தூதுவருடன் இணைந்த விமல்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையயில்,“விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
விமல் என்பது எங்களுக்கு ஒரு ஜோகர். கோட்டாபய போவதற்கு முன்னர் நாம் பாய்ந்து விட வேண்டும் என்று மெல்லமாய் பாய்ந்தவர் தான் விமல். மோசமான அமெரிக்கர் என்று ஒரு கதையை பசிலுக்கு பரப்பியவர் விமல் தான்.
அமெரிக்க தூதுவரின் கதை
மீண்டும் இன்னொரு சுற்றில் அமெரிக்க தூதுவர் கதையினை பேசுகின்றார். விமல் அவரது புத்தக வெளியீட்டுக்கு சீனாவின் முன்னாள் தூதுவர் ஹு வை பக்கத்தில் அமர்த்தியுள்ளார்.
எல்லா உத்தர லங்கா சபையின் கூட்டங்களுக்கும் ஹூ கட்டாயம் வருவார்.” என தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
