ஐ.நாவின் பிடியிலிருந்து 50 படை அதிகாரிகளை உடன் காப்பாற்றுங்கள்! அரசிடம் விமல் வேண்டுகோள்

Sri Lanka Army Prof G L Peiris Wimal Weerawansa OHCHR
By Rakesh Oct 07, 2022 12:10 PM GMT
Report

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேராபத்து மிக்கது. இந்தத் தீர்மானத்துக்கு இணங்க, இலங்கையின் சுமார் 50 படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள்சுமத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில் இலங்கை அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இல்லையேல், நாட்டைப் பாதுகாத்த படையினருக்கு இது துரோகமாக இருக்கும் என்றும் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது

ஐ.நாவின் பிடியிலிருந்து 50 படை அதிகாரிகளை உடன் காப்பாற்றுங்கள்! அரசிடம் விமல் வேண்டுகோள் | Vimal S Request To The Government

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அமைச்சர் அலி சப்ரி, உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படுகின்றது என்று எவ்வாறு கூற முடியும் என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பினார்.

இதனை எவ்வாறு ஜெனிவா பேரவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றும் கேட்ட அவர், இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

எனினும், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருந்த நாடுகள், தமது உள்நாட்டு தீர்மானங்களுக்கு இணங்க செயற்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எனினும், மஹிந்த - கோட்டாபய 11 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தமை மற்றும் ரணில் விக்ரமசிங்க தற்போது மேற்கொண்டு வரும் மனித உரிமை செயற்பாடுகளையும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார். 

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US