செட்டிகுளத்தில் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு; பெண் ஒருவர் கைது
செட்டிகுளம் - முகத்தான்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (28.12) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம்- முகத்தான்குளம், பண்ணை இரண்டு பகுதியில் உள்ள மக்கள் குடிமனைக்குள் உள்ள தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணியில் கிரவல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலகத்தால் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பகுதியில் கிரவல் அகழ்வதற்குச் சென்ற போது கிரவல் அகழும் காணியைச் சுற்றியும், அதனையண்டியும் குடியிருக்கும் மக்கள் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது எனத் தடுத்து நிறுத்த முற்பட்டதுடன், அது தொடர்பில் அப்பகுதி கிராம மக்கள் பிரதேச செயலாளருக்கும் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், கிரவல் அகழ்வதற்கு அனுமதி பெற்றவர் குறித்த பகுதியில் கிரவல் அகழ முற்பட்ட போது மக்களுக்கும், கிரவல் அகழ வந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பெண் ஒருவர் தன்னை தாக்கியதாகக் கூறி கிரவல் அகழ அனுமதி பெற்றவர் செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர்
செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணை
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
