மன்னார் நகர சபையின் தன்னிச்சையான முடிவு - வெள்ள நீரில் மூழ்கியுள்ள கிராம மக்கள் (Photos)

Flood People Mannar Heavy Rain
By Ashik Nov 28, 2021 07:38 PM GMT
Report

மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் மன்னார் நகர சபை தன்னிச்சையாக முன்னெடுத்த வீதி அபிவிருத்தி பணிகளின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மன்னார் நகர சபையினால் திடீர் என கிராம மக்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களின் எவ்வித ஆலோசனைகளும் இன்றி தன்னிச்சையாக நகர சபை இவ்வருட அபிவிருத்திக்கான நிதியை செலவு செய்யும் வகையில், நகர சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக மன்னார் நகர சபைக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி வீதி, குரூஸ் கோவில் வீதி, மூர்வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீதிகளில் கிரவல் மண் கொட்டப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நகர சபை தன்னிச்சையாக வருட இறுதி முடிவில் நிதியை செலவு செய்யும் நோக்குடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் வழி நடத்தல் இன்றி குறித்த பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு அளவு கணக்கு இன்றி கிரவல் மண் கொட்டியுள்ளனர்.

எனினும் வடிகான் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மன்னார் நகர சபை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில், இன்று மாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மூர்வீதி பகுதியில் மன்னார் நகர சபையினால் கிரவல் மண் போடப்பட்ட வீதிகளுக்கு அருகாமையில் உள்ள பல வீதிகளினுள் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நகர சபையின் செயலாளர் ஆகியோர் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாகவும், திட்டமிடாத வீதி அபிவிருத்தி பணிகள் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளதோடு, நீண்ட கால பிரச்சனை தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நில கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது.

குறிப்பாக மன்னார் பேசாலை, தலை மன்னார் சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், மடுக்கரை, உட்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

அதே நேரம் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதி எழுத்தூர், தாழ்வுபாடு வீதிகளும் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருவதால் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் சில பகுதிகளில் கடல் நீர் மட்டம் அதிகரித்து கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US